(1) சங்க
காலம் இன்றைய
குமுளி அன்றைய சேரர்களின் தலைநகரமாக
குழுமூர் எனப்பட்டது
(2) 12ஆம் நூற்றாண்டு பாண்டிய அரசு வீழ்ந்ததில்
பாண்டிய அரசன் மாணவிக்ரமா தனது
குடும்பத்துடன் விலைமதிப்புமிக்க தங்கம்வைரகருவூலங்களுடன் தப்பி இளங்காலுர் என்ற
ஊரில் தங்கியிருந்தபோது இறந்துபோனான்.
(3) 12ம் நூற்றாண்டு
இறுதி கூடலூர் பகுதியில் கி.பி. 1000 வரை
சேர அரசின் பகுதியாக இருந்தது,
காலமான குறுநில மன்னரின் வாரிசிடமிருந்து
விற்பனைக்கு வந்த, கூடலூருக்கு எதிரே
இருந்த பெருநிலப்பகுதியை தன் வசமிருந்த கருவூலத்தை
(பொன்,வைரம்) விற்று மாணவிக்ரமா
மகன் குலசேகரன், கிரையம்கொடுத்து வாங்கினான். அவ்வாறு பூஞ்சார் அரசுரிமை,
அதாவது பூனையார் தம்பிரான் அரசு ஆரம்பமாயிற்று. இவ்வாறு
பூஞ்சார் அரசின் ஆளுகைக்கு உட்பட்டு
அந்த நிலப்பரப்பு இருந்து வந்துள்ளது. பூஞ்சார் அரசு
பாண்டிய அரச வம்சாவழியினால் தொடங்கப்பட்டு
நடத்தப்பட்ட அரசாகும். அந்த அரசு இறுதிவரை
தங்களை பாண்டிய அரசு என்றே
அழைத்துக்கொண்டுள்ளது. முடியாட்சி காலத்தில் ஒவ்வொரு அரசும் தங்கள்அரசின்
இறையாண்மை அதிகாரத்தை கடவுளிடமிருந்து பெற்றதாவே அறிவித்தன. பூஞ்சார் அரசும்
தங்களது இறையாண்மை அதிகாரத்துக்கு மதுரை மீனாட்சி அம்மனையே
காட்டியுள்ளது. அதன்படிதான் அவர்களால் வெளியிடப்பட்ட வரி இரசிதுகளில்கூட மீனாட்சியம்மன்
துணை என்று எழுதி வெளியிட்டுள்ளது.
அவற்றில் தமிழிலேயே கையொப்பமிட்டுள்ளனர்; இவ்வாறு அந்தஅரசு தமிழ்அரசாகவே
இருந்துள்ளது. இவ்வாறு 19ஆம். நூற்றாண்டின்இறுதிவரை பூஞ்சார் அரசின் ஆளுகைக்குஉட்பட்டிருந்த
நிலப்பரப்புதான் தற்போதைய இடுக்கிமாவட்டத்தின் வட்டங்களான தேவிகுளம், பீர்மேடு மற்றும் உடும்பன்சோலை நிலப்பரப்பாகும்.
குலசேகரன் நிறுவிய மதுரை மீனாட்சி
சுந்தரேஸ்வரர் ஆலயம் இன்றும் அந்த
மலைகளில் உள்ளதை நேஷனல் ஜியோகிராபி
தொலைக்காட்சி ஒளிபரப்பியது.
(4) 15ம்.நூற்றாண்டு தற்போதைய இடுக்கி மாவட்டம் பூஞ்சார்
அரசின் ஆளுகையில் இருந்ததை கேரள அரசின் இணையதளத்தில்
இன்றும் காணலாம். இது மலையாளத்தானே வெளியிட்டது.
(4) 1756ஆம்.
ஆண்டில் வேனாடு அரசன் பலசிறுஅரசுகளை
ஒன்றுசேர்த்து திருவிதாங்கூர் அரசினை உருவாக்கினான். பூஞ்சார்
அரசு உருவாகி 600ஆண்டுகள்கழித்தே திருவிதாங்கூர் அரசு உருவானது.
(5) 1846 பூஞ்சார்
அரசுடன் ஆண்டுக்கு
2000 மூட்டை நெல் குத்தகைக்கு 1846இல்
ஏற்பட்ட ஒப்பந்தப்படி ஏலமலைகளை (தற்போதைய பீர்மேட்டின் ஒரு பகுதி) திருவிதாங்கூர்
அரசு குத்தகைக்கு எடுத்தது. அது மலையாளிகளுக்கு வெறும்
குத்தகைக்கு தமிழனால் தரப்பட்டது.
(6) 1866 20 ஆண்டுகளுக்கு
முன் 1846இல் பூஞ்சார்
அரசிடமிருந்து
2000 மூட்டை நெல் குத்தகைக்குப் பெற்ற
அதே நிலத்தை தமிழகத்துக்கு மோசடியாக
மீண்டும் 1866இல். குத்தகைக்கு விட்டும்
அதற்கும் மேல் மோசடியாக விற்கவும்
துணிந்தான் திருவிதாங்கூர; மலையாளத்து எத்தன். சென்னை மாகாண
அரசும் திருவிதாங்கூர; அரசும் 1866இல் ஒப்பந்தம் செய்து
முல்லைப்பெரியாறு அணை பகுதியை 999 ஆண்டு
குத்தகைக்கு 8000 ஏக்கர் நிலத்தை பெற்றது வெறும் ஆறாயிரம் ரூபாய்க்கு திருவிதாங்கூர் அரசு அந்த நிலத்தை விற்க
முன்வந்தபோதும் அப்போதைய ஆங்கிலஅரசு வாங்க மறுத்தது. காரணம்
அந்த நிலத்தில் திருவிதாங்கூர் மன்னனுக்கு வெறும் குத்தகை பாத்தியதை
மட்டும் உண்டு, கிரைய பாத்தியதை
(sale deed rights) விற்பனை
உரிமை திருவிதாங்கூர் மலையாளத்தானுக்கு இல்லை என்பது தெரிந்ததுதான்.
மேலும் இந்த மோசடி விற்பனைக்குப்பின்
திருவிதாங்கூர் மன்னனிடம் எதிர்காலத்தில் எந்தவொரு ஒப்பந்தமும் ஏற்படும்போதும் ஷரத்துக்களை பலமுறை படித்து மிகவும்
கவனாக ஆராய்ந்த பின்னரே ஒப்புதல்
வழங்கவேண்டும் என்ற குறிப்பு ஆவணத்தில்
உள்ளது.
(7) 1877 திருவிதாங்கூர்;
மன்னரிடம் பணியாற்றிய வக்கீல் ஒருவன் பூஞ்சார்
அரசுடன் ஆண்டு குத்தகை மூவாயிரம்
ரூபாய்க்கு 11-07-1877ல். ஒப்பந்தம்செய்து தற்போதைய
தேவிகுளம் பகுதியை (அந்நாளில் அஞ்சுநாடு) குத்தகை பெற்றான். ஐயாயிரம்
ரூபாய் மறுபயனாகவும் (அட்வான்ஸ்) கொடுத்தான், பூஞ்சார் அரசு நிபந்தனைப்படி. இதற்கு உதவிய குறுநில
மன்னன் கண்ணன்தேவன் பெயரில் தேயிலை எஸ்டேட்
நிறுவப்பட்டது.
(8) 1897 கண்ணன்தேவன்
மலைகள் உற்பத்தி நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டது. பின்பு இந்த நிறுவனத்தை
ஜேம்ஸ் பின்லே என்பவர் கிரையம்
வாங்கினார்.
(9) 1963 பின்லேயுடன்
டாட்டா நிறுவனம் கூட்டு சேர்ந்து டாடா பின்லே தேயிலை கம்பெனி உருவானது.
(10) 1983 முழு
பங்குகளையும் டாடா நிறுவனம் கிரையத்துக்கு
வாங்கி டாடா தேயிலை கம்பெனி என்ற தேயிலைத் தோட்டங்களை நடத்தி வந்தது. 2005ல்
மீண்டும் கண்ணன்தேவன் மலைத்தோட்ட நிறுவனம் என்ற
பெயரில் இன்றுவரை இயங்கி வருகிறது.
(டாடா பின்லே தேயிலை விளம்பரங்கள்
பரவலாக பத்திரிகை மற்றும் சினிமா சிலேடு
களில் வந்ததையும்
83க்குப்பிறகு டாடா பின்லே காணாமல்
போனதற்கும் இதுதான் காரணம்.)
(11) 1897 பூஞ்சார்
அரசு, திருவிதாங்கூர் அரசுகளுக்கிடையே ஏற்பட்ட தாவா குறித்து
விசாரிக்க ஏற்படுத்தப்பட்ட பூஞ்சார்
ஆணையம் அந்நிலப்பரப்பின் மீதான பூஞ்சார் அரசின்
இறையாண்மையை உறுதிப்படுத்தியது.
(12) 1899 பூஞ்சார்
அரசின்மீது தமக்கான இறையாண்மையை அறிவித்துவிட்டு
அதற்கான இழப்பீடு வழங்குமாறு செய்த ஒப்பந்தத்தின்படி அந்தபகுதியின்
வருமானத்தை பூஞ்சார் அரசுக்கு கொடுக்க ஒப்புக்கொள்ளப்பட்டது.
மூலம்: அருளப்பா
அவர்களின் கட்டுரை (arunalawmadurai@gmail.com)